மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மானசி ஜோஷி, சமூக வலைதளங்களில் வெகுவான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். பி.வி.சிந்துவைப் போல் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மானசியை பாட்மிண்டன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில் நேரிட்ட விபத்தில் இடது காலை இழந்த இவர், சிந்துவுக்குப் பயிற்சி அளித்த கோபிசந்திடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.