செய்திகள்

6000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய அணியில் இடம்பிடிக்காத ஒரே வீரர்!

28th Aug 2019 04:34 PM | எழில்

ADVERTISEMENT

 

கடந்த நான்கு வருடங்களாக பிசிசிஐயின் சிறந்த ஆல்ரவுண்டர் விருதைப் பெற்று வருபவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது ஜலஜ் சக்‌ஷேனா. 

இந்நிலையில் சக்‌ஷேனா புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். துலீப் கோப்பைப் போட்டியில் இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இந்தியா ப்ளூ அணி சார்பாக விளையாடிய சக்‌ஷேனா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்கள், 300 விக்கெட்டுகள் எடுத்த 19-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னால் இதைச் சாதித்த 18 பேரும் இந்தியாவுக்காக விளையாடிய நிலையில் சக்‌ஷேனா மட்டுமே இந்திய அணியில் இடம்பெறாத ஒரே துரதிர்ஷ்ட வீரராக உள்ளார். 

இதுவரை 113 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜலஜ் சக்‌ஷேனா 6,044 ரன்களும் 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ADVERTISEMENT

முதல் தர கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

சி.கே. நாயுடு
லாலா அமர்நாத் 
விஜய் ஹஸாரே
வினு மண்கட் 
சி. சர்வேட் 
பாலி உம்ரிகர் 
பாபு நத்கர்னி
சந்து போர்டே
எம்.எல். ஜைசிம்ஹா
சலீம் துரானி
எஸ். வெங்கட் ராகவன்
சையத் அபித் அலி 
மதன் லால் 
கபில் தேவ் 
ரவி சாஸ்திரி
மனோஜ் பிரபாகர்
எஸ். பஹுதுலே
சஞ்சய் பங்கர்
ஜலஜ் சக்‌ஷேனா

ADVERTISEMENT
ADVERTISEMENT