ஆண்டிகுவாவின் கோகோ பே தீவு கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்ட பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நெட்டிசன்கள் சாடினர்.
முதல் டெஸ்டில் மே.இ.தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே 4 நாள்களிலேயே டெஸ்ட் வெற்றியை பெற்றது இந்தியா.
இந்நிலையில் அங்குள்ள கோகோ பே கடற்கரை பகுதியில் வெப்பம், வெப்பம், வெப்பம், பழரசம் குடிக்க நேரம், கோகோ பே அழகாக உள்ளது என படத்தின் கீழே குறிப்பிட்டிருந்தார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் சாஸ்திரியை கடுமையாக சாடியுள்ளனர். மிகப்பெரிய பீர் பாட்டில் படத்தை போட்டு ஒரு நெட்டிஸனும், விஸ்கியை அருந்துகள் என மற்றொருவரும் பீர் பாட்டிலை கையில் கொண்ட சாஸ்திரி படத்தை போட்டும், முதலில் உங்கள் உடல்தகுதியை கவனியுங்கள், நீங்கள் இந்திய பயிற்சியாளர், எனவும், உங்கள் தொப்பையை குறையுங்கள் எனவும், உங்கள் ஆடை ரசனையை மாற்றுங்கள் என வேறொருவரும் சாடி பதிவிட்டுள்ளனர்.