செய்திகள்

துளிகள்...

28th Aug 2019 01:03 AM

ADVERTISEMENT

துப்பாக்கி சுடும் போட்டியை நீக்கியதால், வரும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க இது சரியான தருணம் இல்லை என அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.


அர்ஜுன விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டது மேலும் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் சிறப்பாக ஆட ஊக்கம் தரும் என இந்திய ஹாக்கி அணியின் மிட்பீல்டர் சிங்கலென்சேனா சிங் கூறியுள்ளார். 


வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணியின் பவுலிங் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கற்க வேண்டியது ஏராளம் உள்ள நிலையில், மே.இ.தீவுகளுடன் நடக்கவுள்ள 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் மேற்கு வங்க வீரர் ரித்திமன் சாஹாவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என சையத் கிர்மானி கூறியுள்ளார்.

ADVERTISEMENT


2019-20-இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில் அனுபவம் வாய்ந்த பார்வர்ட் வீரர் ஆன்ட்ரே செம்பிரியை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னையின் எஃப்சி அணி. 33 வயதான செம்பிரி, மால்டாவின் சிறந்த அணியான அப்போலன் லிமாஸோல் அணியில் ஆடியவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT