செய்திகள்

ஐசிசி தரவரிசை: முதல் 10 இடங்களில் பும்ரா

28th Aug 2019 01:05 AM

ADVERTISEMENT


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கில் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் 10 இடங்களில் நுழைந்துள்ளார்.
பேட்ஸ்மேன்களில் கோலி 910 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது இடத்துக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் 904 புள்ளிகளுடன் ஆஸி. வீரர் ஸ்மித் இரண்டாவது இடத்திலும், நியூஸி. கேன் வில்லியம்ஸன் 3, புஜாரா 4-ஆவது இடங்களில் உள்ளனர். அதே நேரத்தில் மே.இ.தீவுகளுடன் சிறப்பாக ஆடிய துணை கேப்டன் ரஹானே 10 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா, 9 இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தில் உள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT