செய்திகள்

அமெரிக்க ஓபன்: ரோஜர் ஃபெடரரிடம் சரணடைந்த இந்திய வீரர்

27th Aug 2019 10:24 AM | Raghavendran

ADVERTISEMENT

 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாம்பான் வீரர் ரோஜர் ஃபெடரர், இளம் இந்தியா வீரர் சுமித் நாகலை (22) எதிர்கொண்டார்.

திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றை 4-6 என கைப்பற்றி ஃபெடரருக்கு நாகல் அதிர்ச்சியளித்தார்.

2003-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்சுற்றுப் போட்டியின் முதல் செட்டை ஃபெடரர் இழப்பது இதுவே முதன்முறையாகும்.

ADVERTISEMENT

2 மணிநேரம் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுதாரித்துக்கொண்ட ஃபெடரர் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றினார்.

இதனால் 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தி ரோஜர் ஃபெடரர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT