ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 359 ரன்கள் இலக்கு 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்படுகிறது.
 இதன் தொடர்ச்சியாக ஹெட்டிங்லியில் 3-ஆவது ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸிஸ் ஆஸி. 179, இங்கிலாந்து 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 பினனர் இரண்டாவது இன்னிங்ûஸ ஆடிய ஆஸ்திரேலிய அணி 75.2 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்னஸ் லேபுச்சேன் 8 பவுண்டரியுடன் 187 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். மேத்யூ வேட் 33, உஸ்மான் காஜா 23, டிராவிஸ் ஹெட் 25, ஜேம்ஸ் பட்டின்ஸன் 20 ரன்களை எடுத்த நிலையில், ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
 இறுதியில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸி. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3-56, ஆர்ச்சர் 2-40, பிராட் 2-52 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
 359 ரன்கள் வெற்றி இலக்கு: ஆட்டத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை இங்கிலாந்து அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 இங்கிலாந்து தரப்பில் ரோரி பர்ன்ஸ்-ஜேஸன் ராய் களமிறங்கினர். எனினும் பர்ன்ஸ் 7, ஜேஸன் ராய் 8 ரன்களுடன் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். பின்னர் கேப்டன் ஜோ ரூட், ஜோ டென்லி ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 48-ஆவது ஓவர் முடிவில் ஸ்கோர் 121 ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com