இந்திய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு 6 மாதங்கள் தடை

சர்வதேச தரத்துக்கு இணையாக தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனக் கூறி இந்திய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு 6 மாதங்கள் தடை விதித்து,
இந்திய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு 6 மாதங்கள் தடை


சர்வதேச தரத்துக்கு இணையாக தொழில்நுட்ப வசதிகள் இல்லை எனக் கூறி இந்திய ஊக்க மருந்து சோதனை ஆய்வகத்துக்கு 6 மாதங்கள் தடை விதித்து, உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (வாடா) நடவடிக்கை எடுத்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துகின்றனரா என கண்டறிவதற்காக அவர்களது மாதிரிகளை ஆய்வு செய்ய தேசிய ஊக்க மருந்து தடுப்பு  ஆய்வகம் இயங்கி வருகிறது.
இங்கு இந்தியாவின் பல்வேறு விளையாட்டு வீரர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தால், வீரர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
வாடா அதிகாரிகள் ஆய்வு: இதற்கிடையே வாடா அதிகாரிகள் இந்தியாவின் ஆய்வகத்தை திடீர் ஆய்வு செய்தனர். அதில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப வசதிகள் இல்லை என்று தெரியவந்தது. ஐசோடோப் மாதிரி பரிசோதனை தரமாக இல்லை என கண்டறிந்தனர்.
இதனால் 6 மாதங்கள் இந்திய ஊக்க மருந்து சோதனை  ஆய்வகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்களின் மாதிரிகளை சோதனைக்காக வாடாவின் அங்கீகாரம் பெற்ற மற்றொரு ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். தற்போது பரிசீலனையில் உள்ள மாதிரிகளும் தெளிவான முடிவைப் பெற ஏதுவாக வாடாவின் மற்றொரு ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அண்மையில் தான் நாடாவின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தடையை எதிர்த்து நாடா சர்வதேச மத்தியஸ்த அமைப்பை 21 நாள்களுக்கும் அணுகலாம்.தடைக்காலத்தில் ஆய்வகத்தில் சர்வதேச தரத்தில் வசதிகளை ஏற்படுத்தி விட்டு மீண்டும் அங்கீகாரம் பெற நாடா விண்ணப்பிக்கலாம். எனினும் இந்த வசதிகளை மேம்படுத்தாவிட்டால், மேலும் 6 மாதங்கள் தடை நீட்டிக்கப்படும்.  
ஒலிம்பிக் சங்கம் கண்டனம்: இந்தியாவில் ஊக்க மருந்து சோதனை தொடர்பான பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது போல் தேசிய ஆய்வகத்தின் செயல்பாடு உள்ளது. இது ஊக்க மருந்து தடுப்பு முயற்சிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். கூடுதல் செலவுடன் வீரர்களின் மாதிரிகளை வேறு நாட்டு ஆய்வகத்துக்கு அனுப்பும் நிலையில் நாடு இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற 11 மாதங்களே உள்ள நிலையில் பெரிய சிக்கல் ஆகும் என ஐஓஏ தலைவர் நரீந்தர் பத்ரா கண்டித்துள்ளார்.
வர்த்தக நோக்கமே காரணம்: இந்திய தேசிய ஊக்க மருந்து ஆய்வகத்துக்கு தடை விதிக்கும் வாடாவின் செயல் வர்த்தக நோக்கத்திலானாது. கடந்த 2018 செப்டம்பரில் வாடா அதிகாரிகள் ஆய்வின் போது குறிப்பிட்டவற்றை நாம் செய்து விட்டோம். இந்த தடை உத்தரவு வியப்பாக உள்ளது. நமது ஆய்வகத்தில் மாதிரிகள் சோதனை மிகவும் மலிவாக செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் இதற்கு அதிக செலவாகிறது. இதில் வர்த்தக நோக்கமே உள்ளது என மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் ராதே ஷியாம் ஜுலானியா கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com