10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் யு.எஸ். ஓபன் வெல்ல வாய்ப்புள்ளது: ரோஜர் ஃபெடரர்

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் யு.எஸ்.ஓபன் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (38) தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் யு.எஸ். ஓபன் வெல்ல வாய்ப்புள்ளது: ரோஜர் ஃபெடரர்

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் யு.எஸ்.ஓபன் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (38) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்த ஆண்டு நடைபெறும் யு.எஸ்.ஓபன் தொடரில் பங்கேற்கிறேன். இதற்கான பயிற்சியில் கடந்த இரு தினங்களாக ஈடுபட்டு வருகிறேன். இது நான் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் பட்டம் வெல்லும் உத்வேகத்தை அளித்துள்ளது. என் மீது நான் தேவையற்ற அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்வதில்லை. இருப்பினும் இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களை போன்று பட்டம் வெல்லும் முனைப்புடனும் நான் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தொடரை எப்படி அணுக வேண்டும் என்ற போதிய திட்டமிடலுடன் கலந்துகொள்கிறேன். எனது ஆட்டத்திறனும் சிறப்பாக உள்ளது. கடந்த சில தொடர்களில் எனக்கு ஏற்பட்ட தோல்வி நன்மை தருவதாகவே அமைந்துவிட்டது.

ஏனென்றால் அது எனது ஆட்டத்தில் இருந்த தவறுகளை சுட்டிக்காட்டி விட்டது. அதிலும் கடந்த தோல்விகளால் நான் இம்முறை வெற்றிபெறுவேன் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடாலுக்கு எதிராக பெற்ற வெற்றி மறக்க முடியாதது. அதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் நான் ஆடிய விதமும் ஒழுங்காக அமைந்துள்ளது.

அனைத்து சவால்களிலும் வெற்றிபெறுவோம் என நம்பிக்கையுடன் செயல்படுபவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்தார். 

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் கைப்பற்றியுள்ளது நினைவுகூரத்தக்கது. பின்னர் 2009-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து 6-ஆவது பட்டத்தை சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டார். 

இந்நிலையில் வயது, உடல்திறன் மற்றும் ஆட்டத்திறன் உள்ளிட்டவைகளால் சமீபகாலமாக சறுக்கலை சந்தித்துள்ள ஃபெடரர் தற்போது மீண்டும் பழைய ஆட்டத்திறனுக்கு திரும்பியுள்ளார். இதனால் 6-ஆவது முறையாக யு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com