செய்திகள்

அடுத்தடுத்து பெவிலியனுக்குத் திரும்பிய பேட்ஸ்மேன்கள்: 67 ரன்களுக்கு ஆல் அவுட்டனாது இங்கிலாந்து

23rd Aug 2019 07:24 PM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவுடனான 3-வது ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் லீட்ஸில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் ஆஸ்திரேலியாவைப் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை இன்று தொடங்கியது. ஜேசன் ராய் இந்த முறையும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் இந்த முறையும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அந்த அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டத் தொடங்கினர். அதிகபட்சமாக ஜோ டென்லி மட்டும் 12 ரன்கள் எடுத்தார்.
 மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதன்மூலம், அந்த அணி 67 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. 

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT