இந்திய  தேர்வுக் குழுத் தலைவராக கும்ப்ளே இருக்க வேண்டும்: விரேந்திர சேவாக்

இந்திய  கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இருக்க வேண்டும் என அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய  தேர்வுக் குழுத் தலைவராக கும்ப்ளே இருக்க வேண்டும்: விரேந்திர சேவாக்


இந்திய  கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே இருக்க வேண்டும் என அதிரடி பேட்ஸ்மேன் விரேந்திர சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
எம்எஸ்கே. பிரசாத் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழுவின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தேர்வுக் குழு நியமிக்கப்பட வேண்டும். பிரசாத் தலைமையிலான குழுவினர் மொத்தமாகவே 13 டெஸ்ட்களில் ஆடிய அனுபவம் மட்டுமே கொண்டுள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
இதுதொடர்பாக சேவாக் கூறியதாவது:  வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படும் கும்ப்ளேவை தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும். தேர்வுக் குழுவை நியமிப்பதில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சச்சின், திராவிட், கங்குலி, ஆகியோருடன் வீரராகவும், இளம் வீரர்களுடன் பயிற்சியாளராகவும் கலந்து ஆலோசித்துள்ளார். 2007-08-இல் ஆஸி. தொடரில் நான் மீண்டும் அணியில் சேர்ந்த போது, தங்கும் அறைக்கு வந்த கேப்டன் கும்ப்ளே அடுத்த 2 தொடர்களுக்கு உன்னை நீக்க மாட்டோம் எனத் தெரிவித்தார். இதுபோன்று வீரர்களுக்கு நம்பிக்கை தரும் நபர் கும்ப்ளே.
தேர்வுக் குழுத் தலைவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி மட்டுமே 
ஊதியமாக தரப்படுகிறது. இதை உயர்த்தினால் ஏராளமான வீரர்கள் முன்வருவர். 
நீங்கள் தேர்வுக் குழுவில் இடம் பெற விரும்புகிறீர்களா எனக் கேட்டபோது, சேவாக் கூறுகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது எனக்கு பிடிக்காது என்றார். மேலும் இரட்டை ஆதாய பதவி விதிமுறைகள் புரிந்து கொள்ள முடியாத வகையில் உள்ளது. கடந்த 2017-இல் பிசிசிஐ  பொது மேலாளர் ஸ்ரீதர் என்னை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கூறினார். அதனால் விண்ணப்பித்தேன்.
மே.இ.தீவுகளில் 5 பந்துவீச்சாளர்களுடன் ஆடினால், ரஹானேவை களமிறக்கலாம். 4 பேருடன் ஆடினால், ரோஹித் சர்மாவை பயன்படுத்தலாம். ஸ்ரீசாந்த் மீதான தடைக்காலம் குறைக்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. ஸ்மித்துக்கு ஏற்பட்ட காயத்தால், கழுத்துப் பட்டை அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதே எனக் கேட்டதற்கு, எனது கிரிக்கெட் வாழ்க்கையில், ஹெல்மெட் மட்டுமே அணிந்தேன் மார்பு பட்டை கூட அணியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com