இந்தியாவுக்குத் திரும்ப வேண்டாம்: இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்குபெற வேகப்பந்துவீச்சாளர் சைனிக்கு பிசிசிஐ கட்டளை!

இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும்படி பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது...
இந்தியாவுக்குத் திரும்ப வேண்டாம்: இந்திய டெஸ்ட் அணியுடன் இணைந்து பயிற்சியில் பங்குபெற வேகப்பந்துவீச்சாளர் சைனிக்கு பிசிசிஐ கட்டளை!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும்படி பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுகமான வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி, தன்னுடைய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாவிட்டாலும் நேற்றுடன் முடிந்த பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார் சைனி. இதையடுத்து டெஸ்ட் தொடரின் மாற்று வீரராகவும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் தொடரும்படி சைனிக்கு பிசிசிஐ கட்டளை பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அந்தச் சிக்கலைச் சரிசெய்யவும் சைனி உதவுவார் என்று அறியப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியின் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதன்மூலம் வருங்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவும் அவருக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருணின் நேரடி மேற்பார்வையில் பயிற்சிகளை மேற்கொள்ளவும் சைனிக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக் குழுவில் சைனிக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com