தீபா மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது!

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
தீபா மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது!

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த விருதுக்காகத் திறமையும், தகுதியும் கொண்டவர்களைத் தேர்வு செய்யும் பணி தில்லியில் நடைபெற்று வந்தது. 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காகப் பரிந்துரைத்தது. இன்று, விளையாட்டு விருதுகளுக்கான வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மிகச் சிறந்த வீரருக்கு உயர்ந்தபட்ச விருதாக ராஜீவ் கேல் ரத்னா விருது தரப்படுகிறது. இதில் ஒரு விருது, ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜொலித்த தீபா மாலிக், மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் தலைமையில் கால்பந்து முன்னாள் நட்சத்திரம் பாய்சுங் புட்டியா, குத்துச்சண்டை உலக சாம்பியன் மேரி கோம் உள்பட 12 உறுப்பினர்கள் குழு இரு வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. 

ஆசிய போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வீரரான பஜ்ரங் புனியா கடந்த 2018-ஆம் ஆண்டே ராஜீவ் கேல் ரத்னா விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது பெயர் தேர்வு செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்துக்கு செல்வேன் என எச்சரித்தார். இந்நிலையில் இந்த வருடம் அவருக்கு விருது கிடைத்துள்ளது. சுஷில்குமார், யோகேஷ்வர் தத், சாக்ஷி மாலிக்  உள்ளிட்டவர்களுக்கு பின் கேல்ரத்னா விருதைப் பெறும் 4ஆவது மல்யுத்த வீரர் பஜ்ரங் ஆவார். டந்த 2018 ஜகார்த்தா ஆசிய போட்டி 65 கிலோ பிரிவில் தங்கம், கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் அதே பிரிவில் தங்கம், உலக சாம்பியன் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற சிறப்புடையவர். வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரக்கூடியவராக கருதப்படுகிறார் பஜ்ரங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com