முதல் டெஸ்ட்: இலங்கைக்கு இன்னும் 135 ரன்கள் தேவை

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடி வருகிறது.
கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை 267 ரன்கள் எடுத்தது.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வால்டிங் 77 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை 4ஆவது நாளான சனிக்கிழமை தனது 2ஆவது இன்னிங்ûஸ தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் திமுத் கருணாரத்னேவும், லஹிரு திரிமனேவும் களமிறங்கினர். இருவரும் அரை சதம் பதிவு செய்தனர். கருணாரத்னே 168 பந்துகளில் 71 ரன்களுடனும், லஹிரு 132 பந்துகளில் 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆட்ட நேர முடிவில் 50 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 
அந்த அணி 133 ரன்கள் எடுத்துள்ளது.  அந்த அணி வெற்றி இலக்கை அடைய 135 ரன்கள் தேவை. கடைசி நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
2 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் விளையாட நியூஸிலாந்து, இலங்கைக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com