செய்திகள்

துளிகள்...

18th Aug 2019 01:02 AM

ADVERTISEMENT

 

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரசல் டோமிங்கோ (44) நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்தது. அந்த அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ரோட்ஸ் இருந்தார்.

"என்னை மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு நன்றி. இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஃபீல்டிங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் அணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்' என்றார் ரவி சாஸ்திரி. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 20-ஆவது அனைத்து மண்டலப் பணியாளர்களுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, திருவாரூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

சாலையில் காலணி அணியாமல் 100 மீட்டர் தொலைவை 11 விநாடிகளில்  கடந்த மத்தியப் பிரதேச இளைஞர் ரமேஷ்வர் சிங்கை பயிற்சி மையத்தில் சேர்ப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி அளித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT