செய்திகள்

ஆஷஸ் தொடர்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 250

18th Aug 2019 01:04 AM

ADVERTISEMENT

புகழ்பெற்ற ஆஷஸ் தொடரில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 258 ரன்கள் எடுத்திருந்தது.
3ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதியில் நிறுத்தப்பட்டதை அடுத்து, 4ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், 92 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஆஷஸ் தொடரில் தொடர்ந்து 7ஆவது முறையாக 50 அல்லது அதற்கு அதிகமான ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை ஸ்மித் படைத்தார். 94.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸி. அணி 250 ரன்களை சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஸ்டூவார்ட் பிராட் 4 விக்கெட்டுகளையும், ஜோப்ரா ஆர்ச்சர் (2 விக்கெட்), கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 8 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2ஆவது இன்னிங்ûஸ  தொடங்கி விளையாடி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் என்பதால் இந்த ஆட்டம் சமனில் முடிய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, இந்த இன்னிங்ஸில் 71.2 ஆவது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்து ஸ்மித்தின் தலையில் பலமாக தாக்கியது. 
இதனால், அவர் சுருண்டு விழுந்தார். பின்னர், பெவிலியன் சென்ற அவர், 86 ஆவது ஓவரில் பீட்டர் சிட்டில் ஆட்டமிழந்த பிறகு, களத்துக்கு மீண்டும் திரும்பினார். முதல் டெஸ்ட்டில் ஆஸி. வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT