சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

3-ஆவது ஒருநாள் மே.இ.தீவுகள் 240/7

DIN | Published: 15th August 2019 02:40 AM


இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 3-ஆவது ஆட்டம் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் புதன்கிழமை நடைபெற்றது. 
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. கிறிஸ் கெயில், எவின் லெவிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
கெயில் 54-ஆவது ஒருநாள் அரைசதம்: அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.  10-ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.
5 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசிய கெயிலை அவுட்டாக்கினார் கலீல் அகமது. 3 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களை விளாசிய எவின் லெவிஸ், சஹல் பந்தில் தவனிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.
பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர்-ஷாய் ஹோப் இணைந்து அணியின ஸ்கோரை உயர்த்தினர்.
22-ஆவது ஓவரின் போது 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மே.இ.தீவுகள் எடுத்திருந்தது. ஷாய் ஹோப் 19, ஷிம்ரன் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
மழையால் 35 ஓவர்களாக குறைப்பு: 25 ரன்கள் எடுத்திருந்த ஷிம்ரனை போல்டாக்கினார் ஷமி. அவருக்கு பின் ஜடேஜா பந்தில் 24 ரன்களுடன் ஷாய் ஹோப்பும் போல்டானார். 
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் அதிரடியாக ஆடி 30 ரன்களை குவித்து பூரணும், கேப்டன் ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 ரன்களுடனும் வெளியேறினர்.  அப்போது 7 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களுடன் இருந்தது மே.இ.தீவுகள்.
பேபியன் ஆலன் ரன்களுடன் களத்தில் இருந்தனர். 35 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.
இந்திய தரப்பில் கலீல் அகமது 3, ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி!
தங்கம் வெல்வாரா?: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் பி.வி. சிந்து
அதிவேக 50 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை!
மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் அம்பத்தி ராயுடு!
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் யு.எஸ். ஓபன் வெல்ல வாய்ப்புள்ளது: ரோஜர் ஃபெடரர்