சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

முதல் டெஸ்ட்: நியூஸிலாந்து 203/5

DIN | Published: 15th August 2019 01:13 AM
5 விக்கெட் வீழ்த்திய அகிலா தனஞ்செயாவை பாராட்டும் சக வீரர்கள்.

இலங்கைக்கு எதிரான முதல்  டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்துள்ளது. 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இலங்கை-நியூஸி. அணிகள் மோதுகின்றன.  காலேயில் புதன்கிழமை தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூஸி. பேட்டிங்கை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து ஜீத் ராவல்-டாம் லத்தம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜீத் 33, டாம் 30, கேப்டன் கேன் வில்லியம்ஸன் 0, ஹென்றி நிக்கோல்ஸ் 42, வாட்லிங் 1 ரன்களை எடுத்து வெளியேறினர். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்திருந்தது நியூஸி.
மூத்த வீரர் ராஸ் டெய்லர் மட்டுமே நிலைத்து ஆடினார். பின்னர் மோசமான வானிலையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அகிலா தனஞ்செயா அபாரம்: இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா அற்புதமாக பந்துவீசி 5-57 விக்கெட்டுகளை வீழ்த்தி  நியூஸி. அணியின் சரிவுக்கு காரணமாக விளங்கினார்.  
நியூஸிலாந்து 203/5: இலங்கைக்கு எதிரான முதல்  டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்துள்ளது. 
ராஸ் டெய்லர் 86 ரன்களுடனும், மிச்செல் சான்டநர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் முடிவில் 203 ரன்களை எடுத்திருந்தது நியூஸி. 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி!
தங்கம் வெல்வாரா?: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் பி.வி. சிந்து
அதிவேக 50 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை!
மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் அம்பத்தி ராயுடு!
10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் யு.எஸ். ஓபன் வெல்ல வாய்ப்புள்ளது: ரோஜர் ஃபெடரர்