இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியா பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இந்தியா பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. செப்டம்பர் 15-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் தரம்சாலாவில் நடைபெறுகிறது. 

இந்நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே, சூழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஷெனுரன் முத்துசாமி மற்றும் விக்கெட் கீப்பர் ரூடி செகன்ட்ஸ் ஆகிய 3 புதுமுக வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20 அணி விவரம் பின்வருமாறு:

குயின்டன் டி காக் (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (துணைக் கேப்டன்), டெம்பா பவூமா, ஜூனியர் டாலா, ஜார்ன் ஃபார்ட்சூன், பெரான் ஹெண்ட்ரிக்ஸ், ரேஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, ஆண்டில் ஃபெலுவாயோ, டுவைன் ப்ரேடோரியஸ், ககிஸோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, ஜான்-ஜான் ஸ்மட்ஸ்.

டெஸ்ட் அணி விவரம் பின்வருமாறு:

ஃபாஃப் டூ ப்ளெஸிஸ் (கேப்டன்), டெம்பா பவூமா (துணைக் கேப்டன்), தேனுஸ் டி ப்ரைன், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஸூபைர் ஹம்ஸா, கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், ஷெனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் ஃபிலாண்டர், டேன் பீடிட், ககிஸோ ரபாடா, ரூடி செகன்ட்.

எய்டன் மர்க்ராம், தேனுஸ் டி ப்ரைன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக இந்திய ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்கள் மூவரும் டி20 அணிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com