திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் திண்டுக்கல்

DIN | Published: 14th August 2019 01:09 AM


டிஎன்பிஎல் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மதுரையை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்.  முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 175/6 ரன்களை குவித்தது. 
பின்னர் ஆடிய மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
திண்டுக்கல் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த்-ஜெகதீசன் சிறப்பாக ஆடி வலுவான தொடக்கத்தை அளித்தனர். ஹரி நிஷாந்த் 50, ஜெகதீசன் 51, விவேக் 1 சதுர்வேதி 35 ரன்களை எடுத்து அவுட்டாகினர். 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 35 ரன்களை விளாசினார் சதுர்வேதி. சுமந்த் ஜெயின் டக் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய முகமது 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 9 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து அவுட்டானார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது திண்டுக்கல்.
மதுரை தரப்பில் கிரண் ஆகாஷ் 2-, மற்றும் அபிஷேக் தன்வர், ரஹில் ஷா, லோகேஷ் ராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஜெகதீசன் கெளஷிக் 40, சரத் ராஜ் 32, ஆகியோர் மட்டுமே அதிகட்ச ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
திண்டுக்கல் தரப்பில் ராமலிங்கம் ரோஹித் 3-20, சிலம்பரசன் 3-18, அபிநவ் 2-18 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி