திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

சென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்

DIN | Published: 14th August 2019 01:10 AM


ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த மெயில்சன் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
பிரேசிலைச் சேர்ந்த அவர் கேப்டனாகவும் செயல்பட்டு 3 சீசன்களில் ஆடியுள்ளார். 2015, 2017 இறுதிச் சுற்றில் சென்னையின் அணி பட்டம் வென்றது. ஐஎஸ்எல் இறுதியில் 2 முறை கோலடித்த வீரர் என்ற சிறப்பை மெயில்சன் பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியிலும் சென்னையின் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற உதவினார்.
அவர் விலகியதை அடுத்து, ருமேனியாவைச் சேர்ந்த மிட்பீல்டர் லூசியன் கோயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூல் வரும் 2019-20 சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறியுள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி