வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஷரபோவா, வோஸ்னியாக்கி வெற்றி

DIN | Published: 14th August 2019 01:11 AM


சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மகளிர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரியா ஷரபோவா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 6-3,7-6 என்ற நேர் செட்களில் அலிஸன் ரிஸ்கேவை வீழ்த்திய ஷரபோவா , அடுத்த சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை ஆஷ்லி பர்டியுடன் மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-4, 6-4 என உக்ரைனின் டயானாவையும், ரெபக்கா 6-3, 3-6, 7-5 என ஜோஹன்னா கொண்டாவையும், குஸ்நெட்சோவா 7-6, 6-7, 6-4 என செவஸ்டோவையும், செரீனா 7-5, 6-2 என லாரன் டேவிஸையும் வென்றனர்.
ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே 4-6, 4-6 என்ற செட் கணக்கில் ரிச்சர்ட் கேஸ்கட்டிடம் தோல்வியடைந்தார். இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் ஒற்றையர் பிரிவில் களமிறங்கியுள்ளார் முர்ரே.
ரோஜர் பெடரர் 7-6, 6-3 என மேட்டியோ பெர்ரடனியையும், நிக் கிர்ஜியோஸ்  7-5, 6-4 என லாரென்úஸாவையும் வீழ்த்தினர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!
சீனா ஓபன்: காலிறுதியில் சாய் பிரணீத்: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சரத் கமல்-ஜி.சத்தியன் இணை
ஒலிம்பிக் போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி குமார் தாஹியா தகுதி
அந்த நாள் ஞாபகம்..!