செய்திகள்

ரோஜர்ஸ் கோப்பை: அரையிறுதியில் நடால், செரீனா

11th Aug 2019 02:21 AM

ADVERTISEMENT

 

மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு முன்னணி வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.

நடப்பு சாம்பியனான அவர் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபேபியோ போகினியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் நீடித்தது. 

ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இரண்டாம் நிலை வீரர் டொமினிக் தீமை வீழ்த்தினார். மூன்றாம் நிலை வீரரான அலெக்சாண்டரர் வெரேவ் 6-3, 6-3 என ரஷிய வீரர் காரென் கச்சனோவிடம் வீழ்ந்தார்.  

ADVERTISEMENT

அரையிறுதியில் செரீனா:  டொரண்டோவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார்.

காலிறுதியில் ஜப்பானின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒஸாகாவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார் செரீனா. கடந்த யுஎஸ் ஓபன் இறுதி ஆட்டத்தில் ஒஸாகாவிடம் தோல்வியுற்றதற்கு தற்போது பழிதீர்த்துக் கொண்டார் அவர்.

விம்பிள்டன் சாம்பியன் சிமோனஹலேப்-செக். வீராங்கனை மேரி புஸ்கோவா இடையே நடைபெற்ற ஆட்டத்தில் காயமடைந்த ஹலேப் வெளியேறினார்.

கனடா இளம் வீராங்கனை பியான்கா அன்ட்ரீஸ்கு 6-0, 2-6, 6--4 என கரோலினா பிளிஸ்கோவாவை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் சோபியா கெனின் 7-6, 6-4 என எலினா விட்டோலினாவை வென்றார்.

போபண்ணா-ஷபோவலோவ் இணை: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ரஷியாவின் டெனிஸ் ஷபோவலோவ் இணை காலிறுதியில் பிரான்ஸ் பெனாய்ட்-ஸ்விஸ் வாவ்ரிங்காவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிரணி வராததால், போபண்ணா இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT