திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

யுடிடி: இறுதிச் சுற்றில் சென்னை லயன்ஸ்

DIN | Published: 11th August 2019 02:27 AM

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி இறுதிச் சுற்றுக்கு சென்னை லயன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை மூத்த வீரர் சரத்கமலின் அற்புத ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது.
அரையிறுதியில் கோவா சேலஞ்சர்ஸ் அணியை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது சென்னை. மகளிர் ஒற்றையர் பிரிவில் செங் ஐ சிங் 3-0 என பெட்ரிஸா சோல்ஜாவையும், மதுரிகா பட்கர் 2-1 என அர்ச்சனா காமத்தையும் வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் 2-1 என அமல்ராஜ் அந்தோணியையும், அல்வரோ ரோபிள்ஸ் 2-1 என டியாகோவையும் வீழ்த்தினர். கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்-பெட்ரிஸ்ஸா இணை 3-0 என்ற கேம் கணக்கில் அமல்ராஜ்-செங் ஐ சிங் இணையை வென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் தபாங் தில்லியுடன் மோதுகிறது சென்னை லயன்ஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி