திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

மே.இ.தீவுகள்- ஏ அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

DIN | Published: 11th August 2019 02:26 AM

மே.இ.தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய ஏ அணி.
இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடர் 3-ஆவது ஆட்டம் டரோபாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 201 ரன்களுக்கும், மே.இ.தீவுகள் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஷுப்மன்கில்லின் (204) அபார இரட்டை சதத்தால் 365/4 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
373 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணியால் 314/6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் 
ஜெரேமி சோலோசனோ 92, பிராண்டன் கிங் 77, சுனில் அம்ப்ரிஸ் 69 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷபாஸ் நதீம் 5-103 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
ஏற்கெனவே 2 டெஸ்ட் ஆட்டங்களில் வென்ற நிலையில் 2-0 என தொடரை கைப்பற்றியது இந்திய ஏ அணி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி