திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

மே.இ.தீவுகள் டெஸ்ட் அணியில் புதுமுகம் ரகீம் கார்ன்வால்

DIN | Published: 11th August 2019 02:29 AM

இந்தியாவுக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகள் அணியில் புதிதாக ஆப் ஸ்பின்னர் ரகீம் கார்ன்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது.  இதற்கான மே.இ,தீவுகள் அணியை அதன் தேர்வுக் குழுத் தலைவர் ராபர்ட் ஹெயின்ஸ் அறிவித்தார்.
26 வயது ஆல்ரவுண்டரான கார்ன்வால், உள்ளூர் சாம்பியன் போட்டி, மே.இ.தீவுகள் ஏ அணியில் சிறப்பாக ஆடியதால் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். கூடுதல் பவுன்ஸ், சுழற்சியுடன் சிறப்பாக பந்துவீசுவார் ரகீம் என ராபர்ட் தெரிவித்துள்ளார். மேலும் கீமோ பால் சேர்க்கப்பட்டுள்ளார். 
அணி விவரம்: ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கிரெய்க் பிராத்வெயிட், டேரன் பிராவோ, ஷமார்க் புருக்ஸ், ஜான் கேம்பல், ராஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டெளரிச், ஷனான் கேப்ரியேல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கெமர் ரோச். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி