திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஆசிய வாலிபால்: இறுதிச் சுற்றில் இந்தியா: பாகிஸ்தானை வீழ்த்தியது

DIN | Published: 11th August 2019 02:25 AM

23 வயதுக்குட்பட்டோர் ஆசிய வாலிபால் ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு முதன்முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் பாகிஸ்தானை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-25 என்ற வென்ற போதிலும், அடுத்த 3 செட்களை வெல்ல தவறியது பாகிஸ்தான். இந்திய அணி 25-16, 25-22, 25-18 என அபாரமாக ஆடி இறுதிச் சுற்றில் நுழைந்தது.
இரண்டாவது செட்டில் இந்திய வீரர்கள் ஷான் ஜான், அமித் குலியா தங்கள் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நான்காவது செட்டில் எந்த நிர்பந்தமும் இல்லாமல் சிறப்பாக ஆடியது இந்தியா. 
சீன தைபேவுடன் மோதல்: மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றது சீன தைபே.
ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் இந்தியா-சீனதைபே அணிகள் மோதுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி