திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து: இந்திய விமானப் படை, வருமான வரித் துறை அணிகள் வெற்றி

DIN | Published: 11th August 2019 02:23 AM
கோவையில் நடைபெற்று வரும் 55-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் மோதிய இந்திய விமானப் படை, கேரள மின்வாரிய அணி வீரர்கள்.

கோவையில் நடைபெற்று வரும் 55-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய விமானப் படை, சென்னை வருமான வரித் துறை அணிகள் வெற்றி பெற்றன.
 பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 54 ஆண்டுகளாக அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 55-ஆவது கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.  இரண்டாம் நாள் ஆட்டங்கள் சனிக்கிழமை மாலை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் இந்திய விமானப் படை, கேரள மின்வாரிய அணிகள் மோதின. இதில், விமானப் படை அணி 74 - 62 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மின்வாரிய அணியைத் தோற்கடித்தது. 
மற்றோர் ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை, கபூர்தலா ஆர்.சி.எஃப். அணிகள் மோதின. இதில் வருமான வரித் துறை அணி 99 - 86 என்ற புள்ளிகள் கணக்கில் ஆர்.சி.எஃப். அணியைத் தோற்கடித்தது. சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்திய ராணுவம், இந்திய கடற்படை அணிகள் மோதின. இதில், ராணுவ அணி 90 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் கடற்படை அணியை வீழ்த்தியது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்: ஆஸி. போராடி டிரா
ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: ஆஸி.யுடன் டிரா செய்தது இந்தியா
மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டம்: இந்தியா 297/5
ஆஷஸ் 2-ஆவது டெஸ்ட்:  இங்கிலாந்து 266 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி