நினைவுகள்...: 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை: 2-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

10-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2011 போட்டியை, இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இதில் இடம் பெற்றிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் அங்கு நடைபெறவிருந்த
நினைவுகள்...: 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை: 2-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்


10-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2011 போட்டியை, இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இதில் இடம் பெற்றிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களால் அங்கு நடைபெறவிருந்த 14 ஆட்டங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டன.

14 அணிகள் பங்கேற்பு

50 ஓவர்கள் அடிப்படையில் நடைபெற்ற இப்போட்டியில் 10 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள், 4 இணை உறுப்பினர் நாடுகள் என 14 அணிகள் கலந்து கொண்டன. 2011 பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை போட்டி நடைபெற்றது.

பாகிஸ்தானில் 2009-இல் இலங்கை அணி மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதால், அந்நாட்டில் நடைபெறவிருந்த போட்டிகளை ஐசிசி மற்ற நாடுகள் பகிர்ந்து அளித்தது.

13 மைதானங்கள்:

இந்தியாவில் 8, இலங்கையில் 3, வங்கதேசத்தில் 2 என மொத்தம் 13 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன.

2 குரூப்கள்:

குரூப் ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்டவை காலிறுதிக்கு தகுதி பெற்றன. 
குரூப் பி பிரிவில் இருந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள் உள்ளிட்டை தகுதி பெற்றன.

இந்திய ஆட்டங்கள்:

லீக் சுற்றில் வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்திலும், அயர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகள் 80 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. தென்னாப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய-இங்கிலாந்து மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.

காலிறுதி:

காலிறுதியில் மே.இ.தீவுகளை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தும், இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அரையிறுதி:

கொழும்புவில் நடந்த நியூஸிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது இலங்கை (நியூஸிலாந்து 217, இலங்கை 220). மொஹாலியில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில்  பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா (இந்தியா 260/9, பாகிஸ்தான் 231).
இறுதி ஆட்டம்: 2-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
மும்பையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. (இலங்கை 274/6, இந்தியா 277/4).
அதிக ரன்கள் எடுத்தவர்: தில்ஷன் திலகரத்னே (இலங்கை)-500.
அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஷாகித் அப்ரிடி (பாக்.), ஜாகீர் கான் (இந்தியா)-21
தொடர் நாயகன் யுவராஜ் சிங் (இந்தியா).

சர்ச்சைகள்

வங்கதேசத்தை வீழ்த்திய மே.இ.தீவுகள் அணியினர் பயணித்த பேருந்து மீது ரசிகர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 
வங்கதேச அணி சென்ற பேருந்து என நினைத்து கற்களை வீசியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதற்காக மே.இ.தீவுகளிடம் வருத்தம் தெரிவித்தது வங்கதேசம்.
மும்பையில் நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால், ஆட்டத்தை தடை செய்வோம் என சிவசேனா மிரட்டியது. எனினும் இலங்கையே இறுதிக்குள் நுழைந்தது.

-தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com