வெள்ளிக்கிழமை 19 ஜூலை 2019

லா லிகா: ரியல் மாட்ரிட் வெற்றி

DIN | Published: 23rd April 2019 01:21 AM
ஹாட்ரிக் கோலடித்த கரீம் பென்ஸாமா.


ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
லா லிகா பட்டியலில் பார்சிலோனா முதலிடத்திலும், அதலெடிக்கோ மாட்ரிட் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக ஸினடேன் ஸிடேன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த அணி மீண்டும் வலுப்பெற்று வருகிறது. 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் அதலெட்டிக் பில்பவோ அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. கரீம் பென்ஸாமா ஹாட்ரிக் கோலடித்தார். பில்பவோ 7-ஆவது இடத்தில் உள்ளது. 
ப்ரீமியர் லீக்-லிவர்பூல் வெற்றி: ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக லிவர்பூல்-கார்டிப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று லிவர்பூல் மீண்டும் முதலிடத்தைப் பெற்றது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கௌன்டி டி20-யில் டி வில்லியர்ஸ் அதிரடி
ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை: வேலைவாய்ப்பை இழந்ததாக வீரர்கள் மன வேதனை
சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஐசிசி கௌரவிப்பு
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை: ஐசிசி நடவடிக்கை
மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி தேர்வு திடீரென ஒத்திவைப்பு