திங்கள்கிழமை 22 ஜூலை 2019

முதலிடத்தில் தில்லி 

DIN | Published: 23rd April 2019 01:04 AM
வெற்றிக்கு வித்திட்ட பிரித்வி-பந்த்.


ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தில்லி. ராஜஸ்தான் வீரர் ரஹானே சதமடித்தது வீணானது
தில்லி அணியில் ரிஷப் பந்த் 78 ரன்களை விளாசினார். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ராஜஸ்தான் தரப்பில் ரஹானே-சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன், ரபாடாவால் ரன் அவுட் செய்யப்பட்டு கோல்டன் டக்கானார்.  இதைத் தொடர்ந்து ரஹானே-கேப்டன் ஸ்மித் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். 
முந்தைய ஆட்டங்களை போல் இல்லாமல் இதில் அபாரமாக ஆடினார் ரஹானே. 
ஸ்மித் 8-ஆவது அரைசதம்: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஸ்மித் தனது 8-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 8 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களை விளாசி அவர் அவுட்டானார். 
எனினும் பென் ஸ்டோக்ஸ் 8, அஷ்டன் டர்னர் 0, ஸ்டுவர்ட் பின்னி 19, ரியான் பராக் 4 என சொற்ப ரன்களில் வெளியேறினர்.
ரஹானே 2-ஆவது சதம்: 
தனது 2-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்த ரஹானே 3 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 63 பந்துகளில் 105 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது ராஜஸ்தான்.
தில்லி தரப்பில் ரபாடா 2-37 விக்கெட்டுகளையும், இஷாந்த், அக்ஸர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
192 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தில்லி அணி வீரர்கள் பிரித்வி ஷா-ஷிகர் தவன் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். 
இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 2 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 2 பந்துகளில் 54 ரன்களை விளாசிய தவனை அவுட்டாக்கினார் ஷிரேயஸ் கோபால். தனது 36-ஆவது ஐபிஎல் அரைசதத்தையும் பதிவு செய்தார் தவன். பின்னர் வந்த கேப்டன் ஷிரேயஸ் ஐயரை 4 ரன்களுடன் வெளியேற்றினார் ரியான் பராக்.
பிரித்வி-பந்த் அதிரடி: இதன் பின் இளம் வீரர்கள் பிரித்வி ஷா-ரிஷப் பந்த் அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினர். இதனால் 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்திருந்தது தில்லி.
பந்த் 10ஆவது அரைசதம்:
தில்லி வீரர் ரிஷப் பந்த் தனது 10-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 
1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 42 ரன்களை எடுத்த பிரித்வி ஷிரேயஸ் கோபால் பந்தில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். ரூதர்போர்ட் 11 ரன்களுடன் குல்கர்னி பந்தில் அவுட்டானார். 
4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 78 ரன்களை விளாசி ரிஷப் பந்த்தும், 3 ரன்களுடன் இங்கிராமும் களத்தில் இருந்தனர்.
19.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து வென்றது தில்லி.
ராஜஸ்தான் தரப்பில் ஷிரேயஸ் ஐயர் 2-47 விக்கெட்டுகளை சாய்த்தார்.
11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளை எடுத்து பட்டியலில் முதலிடத்துககு முன்னேறியது தில்லி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மே.இ.தீவுகள் தொடருக்கான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகள் அறிவிப்பு: டி20 அணியில் புதுமுகம் ராகுல் சாஹர்
ஹிமா தாஸ் 5-ஆவது தங்கம்
இந்தோனேஷிய ஓபன் இறுதிச் சுற்று: சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்
அம்பதி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை
புரோ கபடி: தமிழ்த் தலைவாஸ், குஜராத் அணிகள் வெற்றி