வியாழக்கிழமை 23 மே 2019

மீண்டும் வெற்றி நடை போட சென்னை அணி முனைப்பு: ஹைதராபாதுடன் இன்று மோதல்

DIN | Published: 23rd April 2019 01:25 AM


ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் வெற்றி நடை போடும் முனைப்பில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ளது. பெங்களூருவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வியுற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டு சென்னை அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில் அணியில் செயலிழந்த தொடக்க வரிசையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் சுற்றில் நுழைந்து விடும் சென்னை.தோனி அதிரடியாக ஆடியும் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள் வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை. மொத்த அழுத்தமும் தோனியின் மீதே குவிந்துள்ளது. 
மிடில் ஆர்டர் குழப்பத்தில் ஹைதராபாத்: ஹைதராபாத் அணியில் தொடக்க வரிசை வீரர்கள் வார்னர்-பேர்ஸ்டோவ் மட்டுமே அற்புதமாக ஆடி வருகின்றனர். வார்னர் 517 ரன்களையும், பேர்ஸ்டோவ் 445 ரன்களையும் மொத்தமாக குவித்துள்ளனர். அதே நேரத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அரையிறுதிக்குள் நுழையும் அணிகள் எவை?: சச்சின் டெண்டுல்கர் கணிப்பு!
ஊக்க மருந்து விவகாரம்: கோமதியின் சகோதரர் மறுப்பு
உலகக் கோப்பையை கோலியால் மட்டுமே வென்று தர முடியாது: வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை
பிரிட்டீஷ் ஓபன் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோஷ்னா
1975 உலகக் கோப்பை:ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இறுதி ஆட்டம்