திங்கள்கிழமை 22 ஜூலை 2019

எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தினார் தோனி: கோலி

DIN | Published: 23rd April 2019 01:25 AM


தனது அபார ஆட்டத்தின் மூலம் தோனி எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டார் என பெங்களூரு கேப்டன் கோலி கூறியுள்ளார்.
இரு அணிகள் இடையே பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு 161 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் தோனி அற்புதமாக ஆடி கடைசி ஓவரில் 24 ரன்களை விளாசினார். எனினும் துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றது.
இதுதொடர்பாக விராட் கோலி கூறியதாவது-
19-ஆவது ஓவர் வரை நாங்கள் சிறப்பாகவே பந்துவீசினோம். ஸ்கோர் 160-ஐ தற்காப்பது முடிந்தளவு மேற்கொண்டோம். மைதானத்தில் பனியும் பெய்தது. கடைசி பந்தில் இதுபோன்ற நிலை ஏற்படும் என நினைத்தேன். சிறிய வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றாலும் மகிழ்ச்சி தருகிறது. தோனி அற்புதமாக ஆடி, எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். பார்த்திவும், டி வில்லியர்ஸும் சிறப்பாக ஆடினர். 175 ரன்களை பெற்றிருந்தால் எளிதாக இருந்திருக்கும். பவர்பிளேயிலும் விக்கெட்டை வீழ்த்தினோம் என்றார் கோலி. 
தொடக்க வரிசை சிறப்பாக ஆட வேண்டும்: தோனி
சென்னை கேப்டன் தோனி கூறியதாவது: எங்கள் தொடக்க வரிசை வீரர்கள் மேலும் சிறப்பாக ஆட வேண்டும். அவர்கள் சரிவர ஆடாததால் அதன் சுமை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது விழுகிறது. இதனால் மேலும் அழுத்தம் கூடுகிறது. பெங்களூருவுடன் நடைபெற்ற ஆட்டம் சிறப்பானதாகும். அவர்களை பெரிய ஸ்கோர் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தினோம். எனினும் எங்கள் தொடக்க வரிசையிடம் சிறந்த பேட்டிங்கை எதிர்பார்க்கிறேன். எதிரணி குறித்து அறிந்த நிலையில் நமது உத்திகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். பெரிய ஷாட்களை ஆடாத போது, மற்றவர்கள் மீது நிர்ப்பந்தம் உண்டாகிறது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும், மிகவும் கணித்து ஆட வேண்டும். பெங்களூரு பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மே.இ.தீவுகள் தொடருக்கான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகள் அறிவிப்பு: டி20 அணியில் புதுமுகம் ராகுல் சாஹர்
ஹிமா தாஸ் 5-ஆவது தங்கம்
இந்தோனேஷிய ஓபன் இறுதிச் சுற்று: சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்
அம்பதி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை
புரோ கபடி: தமிழ்த் தலைவாஸ், குஜராத் அணிகள் வெற்றி