சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் லிவர்பூல்-பார்சிலோனா, அஜாக்ஸ்-டாட்டன்ஹாம் மோதல்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அரையிறுதிக்கு லிவர்பூல், அஜாக்ஸ், டாட்டான்ஹாம், பார்சிலோனா, உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. 
கோலடித்த மகிழ்ச்சியில் டாட்டன்ஹாம் அணியினர்.
கோலடித்த மகிழ்ச்சியில் டாட்டன்ஹாம் அணியினர்.


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அரையிறுதிக்கு லிவர்பூல், அஜாக்ஸ், டாட்டான்ஹாம், பார்சிலோனா, உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன. 
இத்தாலியின் டூரின் நகரில் சீரி ஏ சாம்பியன் ஜுவென்டஸ் அணிக்கும், நெதர்லாந்தின் அஜாக்ஸ் அணிக்கு இடையே புதன்கிழமை இரவு இரண்டாம் கட்ட காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. 
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது அஜாக்ஸ். கடந்த 1997-க்கு பின் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அஜாக்ஸ். முதல் கட்டகாலிறுதி 1-1 என டிராவில் முடிந்தது. நட்சத்திர வீரர் ரொனால்டோ இருந்த நிலையிலும் ஜுவென்டஸால் வெற்றிபெற முடியவில்லை.
லிவர்பூல் அபாரம்: ப்ரீமியர் லீக் அணியான லிவர்பூல் அணி-எஃப்சி போர்டோ அணிகள் இடையே நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 4-1 என்ற கோல் சராசரி அடிப்படையில் வென்று லிவர்பூல் அரையிறுதிக்கு முன்னேறியது. ஸ்பெயின் சாம்பியன் பார்சிலோனா அணியுடன் மோதுகிறது லிவர்பூல்.
டாட்டன்ஹாம் வெற்றி: லண்டன் எதிஹாட் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டாட்டன்ஹாம் அணி 4-3 என்ற கோல் சராசரி அடிப்படையில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பார்சிலோனா அதிரடி: கேம்ப் நெளவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வலுவான பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதிச் சுற்றில் டாட்டன்ஹாம்-அஜாக்ஸ் அணிகளும், பார்சிலோனா-லிவர்பூல் அணிகளும் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com