திங்கள்கிழமை 22 ஜூலை 2019

8-ஆவது தோல்வியா, 2-ஆவது வெற்றியா? பெங்களூரு அணி தவிப்பு

DIN | Published: 19th April 2019 01:19 AM


கொல்கத்தாவுடன் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஆட்டத்தில் 2-ஆவது வெற்றி கிடைக்குமா, அல்லது 8-ஆவது தோல்வி கிடைக்குமா என தவிப்புடன் உள்ளது பெங்களூரு.
ஐபிஎல் 2019 சீசனில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தான் ஆடிய 8 ஆட்டங்களில் 7-இல் தோல்வியும், 1-இல் மட்டுமே வெற்றியும் கண்டு நிலைகுலைந்து போயுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் அதன் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸில் ஆடவுள்ளது பெங்களூரு.
இதில் வென்றால் தான் நடப்பு சீசனில் தொடர்ந்து நீடிக்க முடியும். 
மீளுமா கொல்கத்தா: அதே நேரத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருந்த கொல்கத்தா, தொடர்ந்து 3 தோல்விகளைப் பெற்று 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றே தீர வேண்டிய நிலையில் உள்ளது அந்த அணி. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து வரும் 6 ஆட்டங்களில் 4-இல் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது கொல்கத்தா. 
ரஸ்ஸல் இல்லாததால் பாதிப்பு: அதிரடி வீரர் ரஸ்ஸல் காயமடைந்த நிலையில் விளையாடாதது பாதிப்பை ஏற்பட்டுள்ளது. 
பெங்களூரு:அதே நேரத்தில் பெங்களூரு அணியில் கோலி-டி வில்லியர்ஸ் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். பந்துவீச்சில் இளம் வீரர் நவ்தீப் சைனி சிறப்பாக செயல்படுகிறார். மூத்த வீரர் உமேஷ் யாதவ் முற்றிலும் சோபிக்கவில்லை. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மே.இ.தீவுகள் தொடருக்கான டி20, ஒருநாள், டெஸ்ட் அணிகள் அறிவிப்பு: டி20 அணியில் புதுமுகம் ராகுல் சாஹர்
ஹிமா தாஸ் 5-ஆவது தங்கம்
இந்தோனேஷிய ஓபன் இறுதிச் சுற்று: சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்
அம்பதி ராயுடுவிடம் பாரபட்சம் காட்டவில்லை
புரோ கபடி: தமிழ்த் தலைவாஸ், குஜராத் அணிகள் வெற்றி