ஸ்பெஷல்

இன்றும் சதமடிக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றிய கோலி!

26th Mar 2021 04:15 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள்...

கடைசி 11 ஒருநாள் இன்னிங்ஸில் 7 அரை சதங்கள்...

ஆனாலும் விராட் கோலிக்கு தண்ணி காட்டுகிறார்கள் எதிரணி பந்துவீச்சாளர்கள். டெஸ்ட், ஒருநாள், டி20 என 43 இன்னிங்ஸில் விளையாடி முடித்துவிட்டார் கோலி, ஒரு சதம் இல்லை! இன்றும் இங்கிலாந்துக்கு எதிராக 66 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

ADVERTISEMENT

2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார் கோலி.

2021 மார்ச் 26 வரை அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்.  

டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள கோலி, கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக, 43 இன்னிங்ஸில் விளையாடியும் ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் இருப்பதை எண்ணவென்று சொல்வது? இத்தனைக்கும் கடகடவென ரன்கள் மட்டுமல்லாமல் சதங்களும் அடிப்பவர் என்கிற பெயர் கோலிக்கு இருந்தது. இன்று அவரைப் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை இத்தனை இன்னிங்ஸில் சதமடிக்காமல் கோலி இருந்ததில்லை. இதற்கு முன்பு இரு தருணங்களில் மட்டுமே நீண்டநாளாக சதமடிக்காமல் இருந்துள்ளார்.

43 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை

25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014

24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011

இந்தமுறைதான் இந்த இடைவெளி மிகவும் அதிகமாகிவிட்டது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 14 இன்னிங்ஸில் கோலி சதமடிக்கவில்லை. கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. (டி20யில் ஒரு சதமும் அடித்ததில்லை.)

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி: சதமடிக்காமல் தொடர்ச்சியாக விளையாடிய இன்னிங்ஸ்

13 - ஜுன் 2011 - ஜன. 2012 (முதல் 13 இன்னிங்ஸ்)

12* - பிப்ரவரி 2020 - மார்ச் 2021 (தற்போதைய நிலை)

11 - ஆகஸ்ட் 2015 - ஜூலை 2016 

(டெஸ்டில் கடைசியாக 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம், 136 ரன்கள் எடுத்தார்)

2019 நவம்பரில் கடைசியாக சதமடித்த பிறகு கோலி எடுத்த ரன்கள்:

டெஸ்டுகள்: 2, 19, 3, 14, 74, 4, 11, 72, 0, 62, 27,0 (12 இன்னிங்ஸ்)

ஒருநாள்: 4, 0, 85, 16, 78, 89, 51, 15, 9, 21, 89, 63, 56, 66 (14 இன்னிங்ஸ்)

டி20: 94*, 19, 70*, 30*, 26, 45, 11, 38, 11, 9, 40, 85, 0, 73*, 77*, 1, 80* (17 இன்னிங்ஸ்)

ஒருவேளை இந்த இடைவெளி நீங்கிய பிறகு முன்பை விட இன்னும் அதிகமாக சதங்கள் அடிக்கப் போகிறாரா?

Tags : virat kohli hundred
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT