ஸ்பெஷல்

கடந்த 42 இன்னிங்ஸில் சதம் இல்லை: வேதனைப்படுத்தும் விராட் கோலி!

25th Mar 2021 03:40 PM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார் விராட் கோலி.

அப்போது யாரும் உணர்ந்திருக்க முடியாது, அடுத்தச் சதம் எடுக்க கோலி மிகவும் திணற வேண்டியிருக்கும் என.

அந்த ஆட்டத்துக்குப் பிறகு இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 என 42 இன்னிங்ஸில் விளையாடி விட்டார் கோலி. இதுவரை ஒரு சதம் கூட அவரால் எடுக்க முடியவில்லை.

ADVERTISEMENT

டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள கோலி, கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக, 42 இன்னிங்ஸில் விளையாடியும் ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் இருப்பது கிரிக்கெட் நிபுணர்களையும் ரசிகர்களையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

எதிரணியினர் அவருடைய விக்கெட்டை வீழ்த்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதால் இந்த நிலை சில சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. பல தருணங்களில் அணியை முன்னிறுத்தி அதிரடியாக விளையாடுவதால் தனது விக்கெட்டை இழந்து விடுகிறார் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அப்படித்தான் தனது விக்கெட்டை இழந்தார். 

இதுவரை இத்தனை இன்னிங்ஸில் சதமடிக்காமல் கோலி இருந்ததில்லை. இதற்கு முன்பு இரு தருணங்களில் அவர் நீண்டநாளாக சதமடிக்காமல் இருந்துள்ளார்.

42 இன்னிங்ஸ் - நவ. 2019 - தற்போது வரை
25 இன்னிங்ஸ் - பிப். 2014 - அக். 2014
24 இன்னிங்ஸ் - பிப். 2011 0 செப். 2011

இந்தமுறைதான் இந்த இடைவெளி மிகவும் அதிகமாகிவிட்டது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 13 இன்னிங்ஸில் கோலி சதமடிக்கவில்லை. கடைசியாக ஆகஸ்ட் 2019-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்தார். யார் கண் பட்டதோ, இன்றுவரை மற்றொரு சதத்தைக் காண முடியவில்லை. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி: சதமடிக்காமல் தொடர்ச்சியாக விளையாடிய இன்னிங்ஸ்

13 - ஜுன் 2011 - ஜன. 2012 (முதல் 13 இன்னிங்ஸ்)
12* - பிப்ரவரி 2020 - மார்ச் 2021 (தற்போதைய நிலை)
11 - ஆகஸ்ட் 2015 - ஜூலை 2016 

(கடைசியாக 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் சதம், 136 ரன்கள் எடுத்தார்)

2019 நவம்பரில் கடைசியாக சதமடித்த பிறகு கோலி எடுத்த ரன்கள்

டெஸ்டுகள்: 2, 19, 3, 14, 74, 4, 11, 72, 0, 62, 27,0 (12 இன்னிங்ஸ்)

ஒருநாள்: 4, 0, 85, 16, 78, 89, 51, 15, 9, 21, 89, 63, 56 (13 இன்னிங்ஸ்)

டி20: 94*, 19, 70*, 30*, 26, 45, 11, 38, 11, 9, 40, 85, 0, 73*, 77*, 1, 80* (17 இன்னிங்ஸ்)

கோலி மீண்டும் சதமடிக்க வேண்டும், பல சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். அது விரைவில் நிறைவேற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT