ஸ்பெஷல்

இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?: விஜய் ஹசாரே போட்டியில் அசத்தி வரும் 20 வயது தேவ்தத் படிக்கல்!

10th Mar 2021 05:53 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்துள்ளார் கர்நாடகத்தின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்.

உள்ளூர் போட்டிகளில் சமீபகாலமாக அசத்தி வரும் தேவ்தத் படிக்கல், கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் முத்திரை பதித்தார். ஐபிஎல் போட்டியில் 15 ஆட்டங்களில் 5 அரை சதங்களுடன் 473 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் படிக்கல் தான். 2020 ஐபிஎல் போட்டிக்கு முன்பு விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை என இரு உள்ளூர் போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில் இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார் 20 வயது தேவ்தத் படிக்கல். தொடர்ச்சியாக நான்கு சதங்கள் அடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஆறு ஆட்டங்களில் நான்கு சதங்களுடன் 673 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சராசரி - 168.25.

ADVERTISEMENT

இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் படிக்கல் எடுத்த ரன்கள்

52, 97, 152, 126*, 145*, 101*

விஜய் ஹசாரே கோப்பை 2019/20 - அதிக ரன்கள் எடுத்த படிக்கல் 

11 இன்னிங்ஸ்
609 ரன்கள்
67.66 சராசரி
81.09 ஸ்டிரைக் ரேட்
2 சதங்கள்
5 அரை சதங்கள்

சையத் முஷ்டாக் அலி கோப்பை 2019/20 - அதிக ரன்கள் எடுத்த படிக்கல் 

12 இன்னிங்ஸ்
580 ரன்கள்
64.44 சராசரி
175.75 ஸ்டிரைக் ரேட்
1 சதம்
5 அரை சதங்கள்

இந்த வருட சையத் முஷ்டாக் போட்டியில் மட்டும் கொஞ்சம் சுமாராக விளையாடி விட்டார். 6 ஆட்டங்களில் 218 ரன்கள். 1 அரை சதம் மட்டும். 

கடந்த இரு வருடங்களாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் படிக்கல் இந்திய அணிக்கு விரைவில் தேர்வாக வாய்ப்புள்ளதாகவே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

Tags : Vijay Hazare Trophy Padikkal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT