ஸ்பெஷல்

இன்று வரை முறியடிக்க முடியாத கேப்டன் தோனியின் சாதனைகள்!

DIN

2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனி வசம் உள்ள சாதனைகள்

* 200 ஒருநாள் போட்டிகளிலும் (110 வெற்றிகள், 74 தோல்விகள், 5 டை, 11 முடிவில்லை) 72 டி20 போட்டிகளிலும் (41 வெற்றிகள், 28 தோல்விகள்) தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதேபோல 60 டெஸ்டுகளிலும் (27 வெற்றிகள், 18 தோல்விகள்).

* டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.

* அதிக டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர் தோனி. 2007 முதல் 2016 வரை 72 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் - மார்கன். 62 ஆட்டங்கள்.

* ஒரு கேப்டனாக அதிக டி20 ஆட்டங்களில் (41) வென்றவர் என்கிற சாதனை நீண்ட நாளாக தோனியிடம் இருந்தது. சமீபத்தில் அதை முறியடித்தார் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அஸ்கார் ஆஃப்கன். 52 ஆட்டங்களில் 42 வெற்றிகள். (சமீபத்தில் இவருடைய பதவி பறிக்கப்பட்டு ரஷித் கான். ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.)

* அதிக ஒருநாள் ஆட்டங்களுக்கு (200) கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனிக்கு 3-வது இடம். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்றுவரை அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்களில் தோனிக்கு 2-ம் இடம். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு 110 வெற்றிகள். இந்திய அளவில் அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றி அடைந்தவர், தோனி. 

* ஒருநாள் ஆட்டங்களின் வெற்றி சதவிகிதத்தில் சிறந்த இந்திய கேப்டனாக உள்ளார் கோலி. 95 ஆட்டங்களில் 65 வெற்றிகள். 70.43% அடுத்த இடத்தில் தோனி - 59.52%. 200 ஆட்டங்களில் 110 வெற்றிகள்.

* 1983, 2003, 2011 என மூன்று ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டங்களுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே இந்திய கேப்டன் - தோனி. 2011-ல் அவர் தலைமையில் இந்திய அணி கோப்பையையும் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT