ஸ்பெஷல்

இந்தப் பாரம்பரியத்தையும் மீட்போமா?: சென்னை சேப்பாக்கத்தில் மீண்டும் நடைபெறுமா பொங்கல் டெஸ்ட்?

ச. ந. கண்ணன்

பொங்கல் சமயத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்ற பொங்கல் டெஸ்டுகள்தான் ஞாபகத்துக்கு வரும். 1967-ல் தொடங்கிய முதல் பொங்கல் டெஸ்ட் ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிராக) டிராவில் முடிந்தது.

அதற்குப் பிறகு 1973, 75, 77, 79, 80, 82, 85, 88 எனக் கடகடவென 9 பொங்கல் டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்றுள்ளன. ஜனவரி வந்தாலே சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் எப்போது திறக்கும் என்கிற ஆர்வம்தான் அதிகமாக இருந்திருக்கும். இதை இன்று எண்ணிப் பார்க்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. ஆனால் 1988-ல் இருந்து பொங்கல் டெஸ்டுக்கு ஒரேடியாக மூட்டைக் கட்டிவிட்டார்கள். 

கொடுமை என்னவென்றால் இப்போது, சென்னையில் பொங்கல் டெஸ்ட் மட்டுமில்லை, டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுவதே அரிதான விஷயமாகிவிட்டது. (கரோனா காரணமாக அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கத்துக்குக் கிடைத்துள்ளன.)

கடந்த 12 வருடங்களில் 2 டெஸ்ட் ஆட்டங்கள் மட்டுமே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் முக்கியமான டெஸ்ட் மையங்களில் வேறு எதற்கும் இந்த அவல நிலை இல்லை. (1973 முதல் 1988 வரை 15 ஆண்டுகளில் சென்னையில் 14 டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன.)

கிரிக்கெட் ஆட்டங்கள் சரிசமமாக எல்லா மையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் ஐசிசி அட்டவணையைப் பின்பற்றவேண்டிய கடமையும் உள்ளதால் பொங்கல் டெஸ்டை நடத்தமுடியாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனால் என். சீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்தபோது இதில் ஆர்வம் செலுத்தாதபோது வேறு யாரைக் குறை சொல்லமுடியும்? ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டெஸ்டுக்குத் தரும் முக்கியத்துவத்தை நாமும் பொங்கல் டெஸ்டுக்கு அளிக்கலாமே!

டெஸ்ட் கிரிக்கெட் மேலும் வளா்ச்சி பெறவும், ரசிகா்களிடம் ஈா்ப்பு ஏற்படவும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்று 5 நிரந்தர டெஸ்ட் ஆடும் மையங்களை பிசிசிஐ ஏற்படுத்த வேண்டும் என கோலி கூறியுள்ளார். இதற்குச் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் கங்குலியும் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் சென்னைக்கு அதிக டெஸ்டுகள் கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் பொங்கல் டெஸ்டை மீட்டுக்கொண்டு வர கங்குலியின் நண்பரும் அவருடைய ஆலோசகருமான என். சீனிவாசனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் ரூபா குருநாத்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் பாரம்பரியத்தையும் மீட்கவேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கை இனியாவது நிறைவேற வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT