ஸ்பெஷல்

அஸ்வின் 400 விக்கெட்டுகள்: மகத்தான சாதனைகளும் புள்ளிவிவரங்களும்!

DIN

தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

குறைந்த டெஸ்டுகளில் 400 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

77 டெஸ்டுகளில் விளையாடியுள்ள அஸ்வின், 401 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சராசரி - 24.95, ஸ்டிரைக் ரேட் - 53.0.

400 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின், இதன்மூலம் நிகழ்த்தியுள்ள மேலும் பல சாதனைகள்:

* பந்துவீச்சாளர்களின் ஸ்டிரைக் ரேட் என்பது சராசரியாக எத்தனை பந்துகளில் ஒரு விக்கெட்டை எடுக்கிறார் என்பதாகும். குறைந்த ஸ்டிரைக் ரேட் இருந்தால் பந்துவீச்சாளர் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார் என்று அர்த்தம்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்துள்ள பந்துவீச்சாளர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். 53.0 ஸ்டிரைக் ரேட் கொண்டுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன். ஸ்டிரைக் ரேட் - 55.0.

* 400 விக்கெட்டுகளை குறைந்த டெஸ்டுகளில் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் அஸ்வின் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

முரளிதரன் 72 டெஸ்டுகளிலும் அஸ்வின் 77 டெஸ்டுகளிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.     

குறைந்த டெஸ்டுகளில் 400 விக்கெட்டுகள்

முரளிதரன் - 72 டெஸ்டுகள்
அஸ்வின் - 77 டெஸ்டுகள்
ஹேட்லி - 80 டெஸ்டுகள்
ஸ்டெய்ன் - 80 டெஸ்டுகள்

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த 9 வருடங்களில் 110 நாள்களில் 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அஸ்வின். இதில் குறைந்த நாள்களில் 400 விக்கெட்டுகளை எடுத்தவர் ஆஸி.யின் மெக்ராத். அவருக்கு 8 வருடங்கள் 341 நாள்களே தேவைப்பட்டன.

* குறைந்த பந்துகளில் 400 விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் அஸ்வினுக்கு 4-ம் இடம்.

குறைந்த பந்துகளில் 400 விக்கெட்டுகள்

டேல் ஸ்டெய்ன் - 16,634 பந்துகள்
ஹேட்லி - 20,317 - 20,449 பந்துகளுக்குள் (சரியான விவரங்கள் இல்லாததால்)
மெக்ராத் - 20,526 பந்துகள்
வாசிம் அக்ரம் - 21,200 பந்துகள்
அஸ்வின் - 21,242 பந்துகள்

* புதிய பந்தில், முதல் 15 ஓவர்களில், 50+ விக்கெட்டுகளை எடுத்தவர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர் அஸ்வின். அவருடைய டெட் அறிமுகத்துக்குப் பிறகு விளையாடியவர்களில் குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்டவர்களின் பட்டியல்: 

அஸ்வின் 47.4
ஸ்டார்க் - 50.7
ரோச் - 52.1

* அஸ்வினின் டெஸ்ட் அறிமுகத்துக்குப் பிறகு முதல் 15 ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் - அஸ்வின். 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அடுத்தது, இஷாந்த் சர்மா - 50 விக்கெட்டுகள். 

* அஸ்வினின் டெஸ்ட் அறிமுகத்துக்குப் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் 1312 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். அதில் அஸ்வின் மட்டும் 30.5% பங்களித்துள்ளார். இந்திய வீரர்களில் அஸ்வினை விடவும் அதிகப் பங்கு விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்,  அனில் கும்ப்ளே. 30.7%. இந்தப் பட்டியலில் முரளிதரனுக்கு முதலிடம், 40.4%. அஸ்வினுக்கு நான்காம் இடம். 

* அஸ்வினின் 400 விக்கெட்டுகளில் 204 விக்கெட்டுகளை அளித்தவர்கள் இடது கை பேட்ஸ்மேன்கள். டெஸ்ட் வரலாற்றில் வேறு எந்தப் பந்துவீச்சாளரும் இந்தளவுக்கு அதிகமான இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுத்ததில்லை.

ஒருவேளை அவருக்கு எதிராக விளையாடிய அணிகளில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தார்களா என்கிற கேள்வி எழும். எதிரணி வீரர்களில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களில் 33.94% பேரை அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.   

* இந்தியாவில் விளையாடிய டெஸ்டுகளில் 278 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

* தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேனா நாடுகள் என கிரிக்கெட் வட்டாரத்தில் அழைப்பார்கள். இந்த சேனா நாடுகளில் தான் அஸ்வின் பந்துவீச்சு சுமாராக உள்ளது. சேனா நாடுகளில் 63 டெஸ்ட் விக்கெட்டுகளே எடுத்துள்ளார். சராசரி - 40.11. இந்த நாடுகளில் அதிகமான டெஸ்டுகளிலும் அவர் விளையாடியதில்லை. 9 முறை சுற்றுப்பயணம் செய்து 20 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். எனினும் சமீபத்தில் ஆஸ்திரேலியச் சுற்றுபயணத்தில் சிறப்பாகப் பந்துவீசினார் அஸ்வின். 3 டெஸ்டுகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சராசரி - 28.83. 

* விரைவாக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்

 50  டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
100 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
150 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
200 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
250 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
300 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
350 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்
400 டெஸ்ட் விக்கெட்டுகள்: அஸ்வின்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT