ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் காலிறுதிக்குத் தகுதி

31st Jul 2021 07:33 PM

ADVERTISEMENT


ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி. 2-வது ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை அணியான ஜொ்மனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது. 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 1-4 எனத் தோற்றது. 4-வது ஆட்டத்தில் அயர்லாந்தை 1-0 என வென்றது. 

இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமிருந்த நிலையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கக் கடுமையாகப் போராட வேண்டிய நிலைமை உருவானது.
 
தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்  ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய மகளிர் அணி பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4-3 என வென்றது.

இதையும் படிக்க | கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி 

ADVERTISEMENT

குரூப் ஏ பிரிவில் 4-ம் இடத்தைப் பிடிக்க இந்தியாவும் அயர்லாந்தும் கடுமையாகப் போட்டியிட்டன.

கடைசி ஆட்டத்தில் அயர்லாந்து அணி இங்கிலாந்துடன் மோதியது. இதில் அயர்லாந்து வெற்றி பெற்றுவிட்டால் இந்திய மகளிர் அணியால் காலிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் போய்விடும், அயர்லாந்து தோற்றுவிட்டால் இந்திய மகளிர் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது. 

இந்த நிலையில் இங்கிலாந்து, அயர்லாந்து ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் வென்றது.

அயர்லாந்து தோல்வியடைந்ததன்மூலம் இந்திய மகளிர் அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

காலிறுதிச் சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறுகிறது.

Tags : olympics Tokyo Olympics Vandana
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT