ஒலிம்பிக்ஸ்

தகர்ந்த கனவு: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஜோகோவிச் தோல்வி

30th Jul 2021 06:15 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் உலகின் நெ.1 வீரரான ஜோகோவிச் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்-ஐ எதிர்கொண்டார் செர்பியாவின் ஜோகோவிச். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றால் ஒரே வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள், ஒலிம்பிக் தங்கம் என்கிற கோல்டன் ஸ்லாம் பெருமையை அடைய ஜோகோவிச் எண்ணினார். ஆனால் 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளார் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். 2018-க்குப் பிறகு முதல்முறையாக ஜோகோவிச்சை ஸ்வெரேவ் வீழ்த்தியுள்ளார். 

இதையும் படிக்க | ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று வா மகளே: குஷியில் லவ்லினாவின் சொந்த ஊர் மக்கள் (புகைப்படங்கள்)

ADVERTISEMENT

1988-ல் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள், ஒலிம்பிக் தங்கம் என அனைத்தையும் வென்று கோல்டன் ஸ்லாம் சாதனையைப் படைத்தார் பிரபல வீராங்கனை ஸ்டெபி கிராப். அதற்குப் பிறகு வேறு யாராலும் இச்சாதனையை நிகழ்த்த முடியவில்லை.

Tags : Djokovic Golden Slam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT