ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்குத் தகுதி

29th Jul 2021 04:56 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சொ்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார் பிரபல வீரர் ஜோகோவிச். இதில்  6-2, 6-0 என நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

இதையும் படிக்க ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் யாருக்கு முதலிடம்?: சீனா, அமெரிக்காவுக்குக் கடும் சவாலாக விளங்கும் ஜப்பான்!

ADVERTISEMENT

சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா். இது விம்பிள்டனில் அவரது 6-வது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3-வது வீரா் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளாா். 

இதையும் படிக்கஇன்னும் ஒரு வெற்றி பெற்றால்...: பதக்கத்தை நோக்கி நகரும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

ADVERTISEMENT
ADVERTISEMENT