ஒலிம்பிக்ஸ்

செயிலிங்: கடைசி இடத்தில் இந்திய இணை

29th Jul 2021 04:37 AM

ADVERTISEMENT

 

செயிலிங் எனப்படும் படகோட்டும் போட்டியில் ஆடவர் ஸ்கிஃப் 49இஆர் பிரிவில் 4 ரேஸ்களின் முடிவில் இந்தியாவின் கே.சி.கணபதி, வருண் தக்கர் இணை 18-ஆவது இடம் பிடித்து கடைசி அணியாக உள்ளது. 
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ரேஸில் 18-ஆவதாக வந்த இந்த இணை, புதன்கிழமை நடைபெற்ற 3 ரேஸ்களில் முறையே 18, 17, 19-ஆவது இடங்களைப் பிடித்தன. மொத்தமாக 4 ரேஸ்கள் முடிவின் அடிப்படையில் தற்போது 18-ஆவது இடத்தில் கணபதி, தக்கர் இணை உள்ளது. இப்பிரிவில் இன்னும் 8 ரேஸ்களும், அதன் பிறகு பதக்கத்துக்கான ரேஸூம் நடைபெறவுள்ளன. 
இந்தப் பிரிவுகளில் ஒவ்வொரு பந்தயத்திலும் ஒவ்வொரு அணியும் எத்தனையாவது இடம் பிடிக்கிறதோ, அதற்கு அத்தனை புள்ளிகள் வழங்கப்படும். இறுதிச்சுற்று நிறைவடைந்த பிறகு அணிகளின் புள்ளிகள் இரட்டிப்பாக்கப்படும். அதில் குறைந்த புள்ளிகளுடன் இருக்கும் அணிகளே வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT