ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரணீத் மீண்டும் தோல்வி

28th Jul 2021 04:22 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில் குரூப் டி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த 47-ம் நிலை வீரா் மிஷா ஷில்பர்மேனிடம் தோல்வியடைந்தார் 15-ம் நிலை வீரரான சாய் பிரணீத். அப்போதே அவர் போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது. 

இன்று, தனது கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தின் 29-ஆம் நிலை வீரா் மாா்க் கால்ஜோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 14-21, 14-21 என சாய் பிரணீத் தோல்வியடைந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் ஒரு வெற்றியும் பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார். 

ADVERTISEMENT

 

Tags : Sai Praneeth Tokyo Olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT