ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி

28th Jul 2021 03:43 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை விளையாட்டில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். 

மகளிர் தனிநபர் பிரிவில் முதல் சுற்றில் பூட்டானைச் சேர்ந்த கர்மாவை எதிர்கொண்டார் தீபிகா குமாரி. இதில் 6-0 என எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஜெனிபருடன் மோதினார். தீபிகா குமாரிக்கு ஜெனிபர் கடும் சவாலாக விளங்கினார். இறுதியில் 6-4 என்கிற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றார். கடைசிக்கட்டத்தில் ஜெனிபர் 10 புள்ளிகள் எடுக்கவேண்டியபோது 9 புள்ளிகளை எடுத்ததால் நூலிழையில் வெற்றி பெற்றார் தீபிகா குமாரி. 

 

ADVERTISEMENT

 


 

Tags : Tokyo Olympics Deepika Kumari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT