ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் பாட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி. சிந்து வெற்றி

25th Jul 2021 07:52 AM

ADVERTISEMENT


டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து முதல் சுற்றில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து இஸ்ரேலின் பொலிகார்போவாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து 21-7 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய சிந்து பொலிகார்போவாவை திணறடித்தார்.

இதன்மூலம், 28 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற போட்டியில் 21-7, 21-10 என்ற நேர் செட் கணக்கில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

Tags : olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT