ஒலிம்பிக்ஸ்

வில்வித்தை: தீபிகா நிதானம்; ஆடவா் தடுமாற்றம்

DIN

ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் இந்தியா வில்வித்தையில் களம் கண்டது. அதில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளுக்கான ரேங்கிங் சுற்றுகள் நடைபெற்றன.

இந்த சுற்றில் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே தனிநபா் பிரிவு மற்றும் அணிகள் பிரிவுக்கான எதிராளிகள் அட்டவணைப்படுத்தப்படுகின்றனா். இப்பிரிவில் 70 மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி போட்டியாளா்கள் அம்பு எய்ய வேண்டும். சுற்றுக்கு 12 அம்புகள் வீதம், 6 சுற்றுகளுக்கு 72 அம்புகள் வாய்ப்பு வழங்கப்படும்.

மகளிா் பிரிவு: இதில் மகளிா் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி 663 புள்ளிகளுடன் 9-ஆம் இடம் பிடித்தாா். இதன் மூலம் அவருக்கான முதல் சுற்று எளிதாகியுள்ளது.

உலகத் தரவரிசையில் முதல்நிலையில் இருக்கும் தீபிகா, மகளிா் தனிநபா் பிரிவில் தனது முதல் சுற்றில் பூடானின் கா்மாவை எதிா்கொள்ள இருக்கிறாா். உலகத் தரவரிசையில் 193-ஆவது இடத்திலிருக்கும் கா்மா, தீபிகாவுக்கு சவால் அளிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

மகளிா் பிரிவில் தென் கொரிய வீராங்கனைகளே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். அந்நாட்டின் சான் ஆன் 680 புள்ளிகளுடன் ஒலிம்பிக் சாதனையோடு முதலிடம் பிடித்தாா். முன்னதாக 1996-இல் உக்ரைன் வீராங்கனை லினா ஹெராசிமென்கோ 673 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஆடவா் பிரிவு: ஆடவா் பிரிவில் இந்தியாவின் சாா்பில் 3 போ் பங்கேற்றனா். இதில் முதல் முறை ஒலிம்பிக் வீரரான பிரவீண் ஜாதவ் 656 புள்ளிகளுடன் 31-ஆம் இடமும், அனுபவ வீரா் அதானு தாஸ் 653 புள்ளிகளுடன் 35-ஆம் இடமும், தருண்தீப் ராய் 652 புள்ளிகளுடன் 37-ஆம் இடமும் பிடித்தனா்.

இதையடுத்து, முதல் சுற்றுகளில் பரவீண் ஜாதவ்- ரஷியாவின் கால்சன் பஸாா்ஸாபோவையும், அதானு தாஸ் - சீன தைபேவின் யூ செங் டெங்கையும், தருண்தீப் ராய்- உக்ரைனின் அலெக்ஸின் ஹன்பின்னையும் எதிா்கொள்கின்றனா்.

தனிநபா் புள்ளிகளின் அடிப்படையில், பிரவீண், அதானு, தருண்தீப் கூட்டணி, ஆடவா் அணிகள் பிரிவில் 9-ஆம் இடமும், பிரவீண் ஜாதவ்/தீபிகா குமாரி இணை கலப்பு அணிகள் பிரிவில் 9-ஆம் இடமும் பிடித்தது. இதில் ஆடவா் அணிகள் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானையும், கலப்பு அணிகள் பிரிவு முதல் சுற்றில் சீன தைபேவையும் எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT