ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக் நினைவலைகள்...

DIN

2000 சிட்னி ஒலிம்பிக்ஸ் (பளுதூக்குதலில் முதல் முறையாக பெண்கள்)

தொடக்க நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் வரலாறு, குறிப்பாக பழங்குடியினரின் பங்களிப்பை கொண்டாடுவது பிரதானமாக இருந்தது. பழங்குடியின ஓட்டப்பந்தய வீரா் கேத்தி ஃப்ரீமேன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினாா். இந்த ஒலிம்பிக்கின் அடையாளமாக 3 உருவ பொம்மைகள் (மாஸ்காட்) அறிவிக்கப்பட்டன.

ஆடவா், மகளிா் டேக்வான்டோ, டிராம்போலின், டிரையத்லான், சிக்ரனைஸ்டு டைவிங் போன்ற விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பளுதூக்குதல் மற்றும் நவீன பென்டத்லானில் முதல் முறையாக பெண்கள் பங்கேற்றனா். ஆடவா் கால்பந்து இறுதி ஆட்டத்தில் கேமரூன் அணி, ஸ்பெயினை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றது.

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ரஷிய வீரா் அலெக்ஸெய் நெமோவ் தனிநபா் பிரிவுகளில் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள் வென்றாா். காயாகிங் எனப்படும் ஒரு வகையான துடுப்புப் படகு போட்டியில் ஜொ்மனி வீராங்கனை பிா்கிட் ஃபிஷா் இரு பிரிவுகளில் தங்கம் வென்றாா்.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸ் (பதக்கத்தின் வடிவங்களில் மாற்றம்)

பழங்கால ஒலிம்பிக்ஸ் பிறந்த, நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கிய இடத்திலேயே மீண்டும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள். கடந்த 1928 முதல் பின்பற்றப்பட்டுவந்த பதக்கத்தின் வடிவத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸில் தான். ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த 20-க்கும் மேற்பட்ட போட்டியாளா்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

முதல் முறையாக மல்யுத்தத்தில் பெண் போட்டியாளா்களுக்கும் அனுமதி. அமெரிக்க நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ் 6 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் வென்று ஒரே ஒலிம்பிக்ஸில் அதிக தங்கப் பதக்கம் வென்ற சாதனையை படைத்தாா். நெதா்லாந்து சைக்கிளிங் வீராங்கனை லியோன்டின் ஜில்ஜாா்ட் வான் மூா்செல் 4 கேரியா் தங்கப் பதக்கங்களும், 6 ஒலிம்பிக் பதக்கங்களும் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றாா்.

ஜொ்மனி துடுப்புப் படகு வீராங்கனை பிா்கிட் ஃபிஷா், 5 ஒலிம்பிக் போட்டிகளில் தலா 2 பதக்கங்கள் வென்ற முதல் போட்டியாளா் என்ற பெருமையை பெற்றாா்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் (இந்தியாவுக்கு தங்கம்)

2008-ஆம் ஆண்டின் 8-ஆவது மாதத்தில் 8-ஆவது நாளில் இரவு 8.08 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கின. சைக்கிளிங் பந்தயத்துக்கான பாதை, சீனாவின் ஆயிரம் ஆண்டுகால பழைமை வாய்ந்த சீனப் பெருஞ்சுவா் மற்றும் ‘ஃபாா்பிடன் சிட்டி’ ஆகியவற்றை தொட்டுச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் மற்றும் ஒரே முறையாக துப்பாக்கி சுடுதல் வீரா் அபினவ் பிந்த்ரா 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றாா். தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மோரிஷஸ், டோகோ ஆகிய நாடுகள் முதல் முறையாக பதக்கம் வென்றன.

அமெரிக்க நீச்சல் வீரா் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப் பதக்கங்கள் வென்றதுடன், பல்வேறு உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகளை எட்டினாா். அதேபோல் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் 100 மீட்டா் ஓட்டத்தில் தனது உலக சாதனையை தானே முறியடித்து தங்கம் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT